Connect with us

Tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! ஆளுநருடன் முதல்வர், துணைமுதல்வர் ஆலோசனை!!

Published

on

சென்னை: தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர், துணைமுதல்வர், காவல்துறை தலைவர் ஆலோசனை நடத்தினர்.
ஊட்டியில் இருந்து சென்னை வந்த ஆளுநருடன் சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடந்துள்ளது.நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அறிக்கை கிடைத்தபின் கருணைத்தொகை உயர்வு மற்றும் பல விஷயங்கள் முடிவெடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைவர் களவிஷயங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் உடனடியாக மாற்றப்பட்டனர்.
நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேசன் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ராம்பா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த சன்முகப்பிரியா, நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 2வது நாளாக இன்றும் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார். 3தென்மாவட்டங்களில் 5நாட்களுக்கு இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator