144 தடையுத்தரவு மீறல்! கமல் மீது போலீஸ் வழக்கு!!

தூத்துக்குடி: நடிகர் கமலஹாசன் 144தடையுத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 10பேர் இறந்தனர்.பலர் காயமுற்று தூத்துக்குடி மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களை மக்கள்நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தது போதாது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், அதுதான் நியாயமானது.
தூத்துக்குடியில் அமைதி ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here