பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25குறைக்க வாய்ப்பு!

சென்னை: பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க வாய்ப்புள்ளதென்று தெரிவித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 24 முதல் மே 14-ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது.கடந்த 9 நாட்களாகத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80 ஆகவும், டீசல் ரூ72 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் கூறியுள்ளதாவது:பெட்ரோல்விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் என பெயரளவுக்கு குறைத்து, மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 ரூபாய் வரை மத்திய அரசு சேமித்தது. அதன் மீது கூடுதலாக 10 ரூபாய் வரிவிதித்து மக்களுக்கு விற்பனை செய்து மத்திய அரசு லாபம் சம்பாதித்தது. அதனால் லிட்டருக்கு ரூ.25 கிடைத்தது.அதனை தற்போது குறைக்கலாம். அப்பணம் சராசரி நுகர்வோருக்கும், சாதாரண மக்களுக்கும் சென்றடையவேண்டிய பணம். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here