கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை! எச்.ராஜா சர்ச்சை கருத்து!!

சென்னை: தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பள்ளி மாணவி உட்பட 9 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்தவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது யார் என்பது உட்பட பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றன.தமிழக முதல்வர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா “போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை” என்று துப்பாக்கி சூடு பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here