சிறுதொழில் கடன் வாங்க வங்கிக்கு செல்லவேண்டாம்!!

மும்பை: சிறுதொழில் செய்ய கடன் வாங்குவதற்கு வங்கிகளுக்கு இனி அலைய தேவையில்லை.
மத்திய அரசு ஆன்லைன் நிறுவனங்கள் வாயிலாக முத்ரா திட்டத்தில் சுயதொழில் கடன் வழங்க முடிவெடுத்துள்ளது.
இளைஞர்கள் சுயதொழில் துவக்க பிரதமர் சுயவேலைவாய்ப்புத்திட்டம் உள்ளது.இத்திட்டத்தில் ரூ.10லட்சம் வரை கடனுதவி மானியத்துடன் வழங்கப்படுகிறது.
வங்கிகள் வாயிலாக இக்கடனுதவி வழங்கப்பட்டு வந்தது.
இனிமேல், ஆன்லைன் நிறுவனங்களான ப்ளிப்கார்ட், அமேசான், உள்நாட்டு நிறுவனங்களான அமுல், பதஞ்சலி ஆன்லைன் வாடகை நிறுவனங்களான ஓலா, உபேர், ஓயோ ஆகியவை வழங்கும்.

தொழில்முனைவோர் தங்களது சேவை அல்லது தொழிலை இந்நிறுவனங்களுடன் இணைந்து செய்வதன் மூலம் வராக்கடன் நிலை ஏற்படாது என்று அரசு எண்ணுகிறது.

எனவே, இத்திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இச்செய்தியை நிதித்துறை இணைசெயலாளர் ரவிக்குமார் உறுதிசெய்துள்ளார்.
இருப்பினும் ரிசர்வ் வங்கி இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here