சொந்த மண்ணில் கொல்கத்தா வெற்றி!

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் ஈடன்
கார்டன்ஸ் மைதானத்தில் நடந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. சுனில் நரைன், கிறிஸ் லின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
முதல் ஓவரிலேயே சுனில் நரைன் அவுட்டானார்.
அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில்
வெளியேறினார்கள். கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார்.


அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார்.
ஷுப்மான் கில் சிறப்பாக ஆடி 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள்
சேர்த்து ஆட்டமிழந்தார்.


இறுதியில், கொல்கத்தா அணி 7 விக்கெட் இழந்து 169 ரன்கள் சேர்த்தது.
170 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி
களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்ய ரகானே, ராகுல் திரிபாதி
ஆகியோர் இறங்கினர்.


திரிபாதி 20 ரன், ரகானே 46ரன்களில் அவுட்டாயினர்.
அரை சதமடித்த நிலையில் சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார்.
3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. பின்னி டக் அவுட்டானார்.

ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, ராஜஸ்தானை
வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையருக்கு தகுதி பெற்றது.
#IPL2018 #KKRvRR

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here