மரம் வெட்டியதால் தகராறு! கிராமத்தலைவர் கொலை!!

ராஞ்சி: மரத்தை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்து மக்கள் தங்கள் கிராமத்தலைவரை படுகொலை செய்துள்ளனர்.
இக்கொடூர சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹூட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.இம்மாவட்டத்தில் உள்ளது சதார் கிராமம்.
அங்குள்ள நன்கு வளர்ந்த மரத்தை கிராமத்தலைவர் யாருடைய அனுமதியின்றி தாமாகவே வெட்டினார்.
இதனால், அவருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.கிராம மக்களில் சிலர் கோடரியால் கிராமத்தலைவரை தாக்கி கொன்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5பேரை கைது செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here