Connect with us

Crime

மகளின் மேற்படிப்பிற்காக ரூ.70 லட்சம்! 3 பேரை சுட்டக்கொன்ற தொழிலதிபர்!!

Published

on

குஜராத்: தொழிலதிபர் தர்மேஷ் ஷா குஜராத் மாநிலம் அஹமதாபாத்தை சேர்ந்தவர். இவர் மனைவி அமிபெண். இந்த தம்பதியினருக்கு ஹிலி, குஷி என இரண்டு மகள்கள்.முதல் மகள் ஹிலியை மேற்படிப்பிற்காக ரூ. 70 லட்சம் செலவு செய்து வெளிநாட்டிற்கு அனுப்ப அமிபெண் முடிவு செய்துள்ளார்.இது குறித்து கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றி தர்மேஷ் ஷா தன்னிடமிருந்த துப்பாக்கியால் மனைவி மற்றும் இரண்டு மகள்களை சுட்டு கொலை செய்துள்ளார்.இது குறித்து தனது நண்பருக்கு தெரிவித்து விட்டு போலீசில் சரணடைந்தார். தனக்கு ரூ.1.5 கோடி கடன் இருக்கிறது. ரூ.70 லட்சம் செலவு செய்து படிக்க வைக்க வேண்டும் என்று மனைவி வற்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூன்று பேரையும் சுட்டு கொன்றதாகவும் கைதான தொழிலதிபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator