Connect with us

National

முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை சினிமாவாகிறது!

Published

on

மும்பை: கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை சினிமா படமாக வெளிவந்து வரவேற்பை பெற்று நல்ல வசூலும் கிடைத்தது.இந்த வரிசையில் தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி  வாழ்க்கையும் படமாக தயாராக உள்ளது. இப்படத்தை பிரபல இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்க உள்ளார்.படம் தொடர்பாக கங்குலியை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. கங்குலி எழுதிய எ செஞ்சுரி இஸ் நாட் எனப் என்ற சுயசரிதை புத்தகத்தை தழுவி படம் தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.கங்குலி கூறும்போது படம் தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator