மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி! நீதி விசாரணைக்கு உத்தரவு!!

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்தோர் உடலைக்காண பொதுமக்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு திரளாக வந்தனர்.
மருத்துவமனை பகுதி முற்றுகையிடப்பட்டது போன்று காணப்பட்டது. இறந்தவர்களின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மருத்துவமனை வளாகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் 4நீதிபதிகள் முன்னிலையில் 6டாக்டர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. உடல்கள் மாலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
நகரம் முழுவதும் 144தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்து ஒரு வாலிபர் இறந்துள்ளார்.
போலீசார் மீது கல்வீச்சு நடந்ததாகவும், போலீசார் கும்பலை கலைக்க துப்பாக்கியால் சுட்டதில் காளியப்பன்(22)என்பவர் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருண ஜெகதீசன் விசாரிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here