மத்திய மந்திரியின் 21வயது மகன் திடீர் பலி!

புதுடெல்லி: பாஜகவை சேர்ந்த பண்டாரு தத்தாத்ரேயா முன்னாள் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.செகந்திராபாத் தொகுதி எம்.பியாக பண்டாரு தத்தாத்ரேயா உள்ளார். இவரது மகன் வைஷ்ணவ் (21). மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று இரவு வைஷ்ணவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக குருநானக் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின் போதே வைஷ்ணவ் பரிதாபமாக இறந்தார்.இளம் வயதிலேயே வைஷ்ணவ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது அரசியல்
வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சி பிரமுகர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here