Connect with us

Crime

பார்வையற்ற பிச்சைக்காரரிடம் பணம் பறித்த திருடன்!

Published

on

சென்னை: கிண்டி ரயில் நிலையத்திலிருந்து கிண்டி தொழிற்பேட்டைக்கு செல்லும் சுரங்கப்பாதையில் 45 வயது மதிக்கத்தக்க பார்வையற்ற ஆண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்.அவரை நெருங்கிய மர்ம நபர் பிச்சைக்காரரிடம் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார். பிச்சைக்காரர் பணத்தை தர மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த மர்ம நபர் மிளகாய் பொடியை பிச்சைக்காரரின் கண்களில் தூவி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றான்.கண் எரிச்சலால் அலறிய பிச்சைக்காரரை அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து உதவினர். பார்வையற்ற பிச்சைக்காரரினிடம் மிளகாய் பொடியை தூவி பணத்தை
பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator