பெங்களூர்:கர்நாடகாவுக்கு இன்று கருப்புதினம் என்று கூட்டணி ஆட்சி பதவியேற்பை விமர்சித்துள்ளது பாஜக.
அக்கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அளித்தபேட்டி:
கர்நாடகாவில் புதிய கூட்டணி ஆட்சி இன்று பதவியேற்றுள்ளது.
காங்கிரசும், மஜதவும் கொள்கைகள் இல்லாத கட்சிகள். அவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள இக்கூட்டணி நீண்டநாள் நீடிக்காது.
ஓரிரு மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர் என்று குமாரசாமி பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை அவர் நிறைவேற்றப்போவதில்லை.
சந்தர்ப்பவாத அரசியலை நடத்திச்செல்வதில் கைதேர்ந்தவர்போல் காணப்படுகிறார்.
இன்றைய தினம் ஒரு கருப்புதினம்.
காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த பல உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருந்தனர். அவர்கள் சிறைவைக்கப்பட்டு ஆட்சியை
அமைக்க பலவந்தமாக ஆதரவு பெறப்பட்டுள்ளது. இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற சூழ்நிலையில் தொடங்கியுள்ளது.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டியளித்தார்.