சாம்சங் 4போன்கள் அறிமுகம்! சியோமிக்கு கடும் நெருக்கடி!

டெல்லி: இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதலிடத்தை இழந்துள்ளது சாம்சங்.
தற்போது முதலிடத்தில் உள்ள சியோமி புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்துகிறது.இதனால் அதன் பிராண்ட் இமேஜ் மற்றும் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
மீண்டும் இந்தியாவில் முதலிடம் பிடிக்க தென்கொரிய நிறுவனமான சாம்சங்க் அதிரடியாக புதுமாடல்களை
ஒரேநேரத்தில் களமிறக்கியுள்ளது.
கேலக்சி வரிசையில் 4போன்கள் அறிமுகமாகி உள்ளன.
கேலக்சி ஜே6, கேலக்சி ஜே8, கேலக்சி ஏ6, கேலக்சி ஏ6ப்ளஸ் ஆகிய மாடல்கள் சாம்சங்க் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

இவையனைத்தும் முழுத்திரையும் பயன்படும் வகையில் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கேலக்சி ஜே6 5.6இஞ்ச் திரை, எக்சினாஸ்7 ஆக்டோகோர் பிராசசர், 3/32ஜிபி, 4/64ஜிபி என 2வகைகள் உள்ளன.
13எம்பி/8எம்பி என இரு கேமராக்கள் உடையது. இவற்றின் விலை முறையே ரூ.13,990 மற்றும் ரூ.16,490.கேலக்சி ஜே8 6இஞ்ச் திரை, பாலிகார்பனேட் யூனிபாடி, குவால்காம் ஸ்னாப்டிராகன்450பிராசசர். 4/64ஜிபி
திறனுடையது. 16எம்பி/5எம்பி திறனுடைய கேமராக்கள் இதில் உண்டு. விலை ரூ.18,990.
கேலக்சி ஏ6போன் 5.6இஞ்ச் திரை உடையது. எக்சினாஸ் ஆக்டோகோர் பிராசசர் 4/32ஜிபி, 4/64ஜிபி என
இருவகைகள் உள்ளன. இருகேமராக்களும் 16மெகாபிக்சல் திறனுடையவை.
இதன்விலை ரூ.21,990 என துவங்குகிறது.கேலக்சி ஏ6ப்ளஸ் மாடல் 6இஞ்ச் திரையும், ஸ்நாப்டிராகன்450 மாடல் பிராசசர் உடையது. 4/64ஜிபி திறன்
உடையது. சென்சாருடன் கூடிய 16மெகாபிக்சல், 5மெகாபிக்சல் டெப்த்சென்ஸ் கேமரா, 24எம்பி செல்பிகேமரா
உடைய இந்த போனின் விலை ரூ.25,990.
புதியமாடல்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விலை மற்றும் வசதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் முதலிடத்துக்கு உயர்வோம் என்று சாம்சங் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here