சாலை விபத்தில் மகன் பலி! விஷம் குடித்து பெற்றோர் தற்கொலை!!

அவினாசி: நாமக்கல் வெப்படை ஈகாட்டூரை சேர்ந்த விவசாயி சக்திவேல் மகன் நிஷாந்த் கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்துள்ளார். நிஷாந்த் தனது நண்பர் கிருபாகரனுடன் மோட்டார் சைக்கிளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று ஊர் திரும்பினர்.இவர்களது பைக் நாதம்பாளையம் அருகே சென்றபோது ரோட்டோரம் நின்ற சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிஷாந்த், கிருபாகரன் இருவரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.நிஷாந்த் இறப்பு குறித்து அவரது தந்தை சக்தி வேல், தாய் சுதா ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் மகனின் உடலை பார்த்து மனமுடைந்த பெற்றோர் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து
மயங்கி விழுந்தனர்.அருகிலிருந்தவர்கள் அவர்களை அவரச சிகிக்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நிஷாந்தின் பெற்றோர் இறந்தனர். விபத்தில் மகனை பறி கொடுத்த பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here