பிவிசி பைப்புகளால் ஆபத்து!

டெல்லி:பிவிசி பைப்புகளின் உட்பகுதியில் ஈயம் பூசப்படுவதால் அதனை பயன்படுத்துவோர் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

தண்ணீர் எடுத்தல், விநியோகித்தல் பணிகளுக்கு அதிகளவில் பிவிசி ப்ளாஸ்டிக் பைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றின் உள்பகுதியில் லெட் எனப்படும் ஈய உலோகம் பூசப்படுகிறது.
இதனால், இருதயம், சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும்.
குழந்தைகள் மூளைவாத நோயால் பாதிக்கும் அபாயம் உண்டு.
ஹிமோகுளோபின் உற்பத்தி உடலில் குறையும்.
சோகை நோய் ஏற்படும். எளிதில் உடல் நோய்தாக்குதல்களுக்கு உள்ளாகும்.
மூளையின் செயல்பாடு, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

இத்தகைய அபாயங்களை பிவிசி பைப் உற்பத்தியாளர்கள் எளிதில் மறைத்துவிட்டு பயன்படுத்த எளிதானது என்று மக்களிடம் விற்று வருகிறார்கள்.
இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அவ்வழக்கில் கடந்த ஜனவரி 2ம் தேதி பிவிசி பைப்புகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது கட்டாயம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. எந்தெந்த பிவிசி பொருட்களில் எந்தந்த அளவுக்கு ஈயப்பூச்சு இருக்கவேண்டும் என்றும் சுற்றுச்சூழல்துறை நிர்ணயித்து பட்டியல் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.ஆறு மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here