Connect with us

Crime

விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை!

Published

on

நாமக்கல்: விபத்தில் மகனை பறிகொடுத்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டையை சேர்ந்த விவசாயி சக்திவேல். இவரது மனைவி சுதா. இத்தம்பதியின் மகன் நிஷாந்த் (22).
நிஷாந்தும், அவரது நண்பர் கிருபாகரனும் மோட்டார் சைக்கிளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.அவினாசி அருகே உள்ள நாதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
ரோட்டோரம் சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.திடீரென மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ மீது மோதியது.இதில் நிஷாந்த், கிருபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். நிஷாந்த் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். வீட்டுக்கு திரும்பிய அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator