ரம்ஜான் நோன்பை கைவிட்டு இந்து இளைஞருக்கு ரத்ததானம்!

உத்தரகாண்ட்: ரம்ஜான் நோன்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்து இளைஞருக்காக ரத்தம் தந்துள்ளார் முஸ்லிம்  வாலிபர் ஒருவர். அஜய்பிஜ்லாவன் என்பவர் உத்தர்காசி பகுதியில் வசித்துவருகிறார். அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ரத்தத்தில் தட்டணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தன. எனவே, அவருக்கு ரத்தம் அளிக்கப்பட்டது.குணமடைந்து வந்த அவருக்கு மேலும் காய்ச்சல் அதிகரித்தது. இதனால் டெஹ்ராடனில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு சேர்க்கப்பட்டார். அஜயின் ரத்தவகை மிகவும் அரிதானது. எனவே, அவருக்கு ரத்தம் தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் சமூக ஊடகங்கள் வழியாக தெரியப்படுத்தியது.சனிக்கிழமை இதனை பார்த்த ஆரிப்கான் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டார். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு ஆரிப்கானை அழைத்தனர். ஆரிப்கானை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உணவு சாப்பிட்ட பின்னர்தான் ரத்தம் எடுக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தனது ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து ரத்ததானம் செய்தார் ஆரிப்கான். சமூக ஊடகங்களில் ஆரிப்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here