ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீவைப்பு!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் தீவைக்கப்பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரின் வாகனங்கள் எரிக்கப்பட்டன. கண்ணீர்புகை குண்டு வீசியும் பொதுமக்கள் கலையவில்லை.அந்த இடமேபோர்க்களமானது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பெண் உட்பட 6பேர் இறந்துள்ளனர்.ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

குடியிருப்பு பகுதி மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிகிறது. அங்கிருப்போரை மீட்கும் பணி நடந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here