நாட்டுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! டெல்லி பிஷப் கடிதத்தால் சர்ச்சை!!

டெல்லி:2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று டெல்லி கிறிஸ்தவ
ஆர்ச் பிஷப் அனைத்துத் தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனில் குட்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:தற்போதைய அரசியல் சூழல் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக கொள்கைகளுக்கும்,
மதச்சார்பின்மைக்கும் பெரும் அச்சுறுத்தலை விடுக்கிறது.
2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை நாம் சந்திக்க இருக்கும் நிலையில் நாம் நாட்டின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அனைவரும் வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒருவர் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, நாட்டின் நலனுக்காக விரதம் இருக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் மரியாதையுடன் கூடிய உண்மையான ஜனநாயகம் எழவும், நம் அரசியல்கட்சி  தலைவர்களிடையே நேர்மையான தேசப்பற்று உருவாகவும் பிரார்த்திக்க வேண்டும்.இதுபோன்ற கடினமான நேரத்தில் உண்மை, நீதி, சுதந்திரத்தைக் கருமேகங்கள் மறைத்துவிடுகின்றன.
இதற்காக நம்முடைய கடவுளிடம் அதை நம் கண்களில் ஒளிரச்செய்யப் பிரார்த்திக்க வேண்டும்.
அனைத்து தேவாலயங்களும், பிரார்த்தனை கூடங்களும் நாட்டின் நலனுக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட
வேண்டும். இம்மாதம் 13-ம் தேதியில் இருந்து பிரார்த்தனையை தொடங்கலாம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கடிதம், கடந்த 8-ம் தேதி அனைத்துத் தேவாலயங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இக்கடிதத்துக்கு அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., விஹெச்பி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இதனிடையே, டெல்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ, தான் எழுதிய கடிதம் எந்தவிதமான உள்நோக்கத்திலும் எழுதப்படவில்லை என தெரவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here