ப்ளே ஆப் சுற்றில் முதல் வெற்றி!

மும்பை: ஐபிஎல் தொடரின் தகுதிச்சுற்று1 ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடந்தது. சென்னை சூப்பர்கிங்க்ஸ் பந்துவீச தொடங்கியது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தவான், கோஸ்வாமி களமிறங்கினர்.
முதல்பந்திலேயே தீபக் சாஹர், தவானை காலிசெய்தார்.
கேன்வில்லியம்சன் களமிறங்கி அதிரடி ஆட்டம் எடுத்தார்.12வது ரன்னில் கோஸ்வாமி,24ரன்னில் வில்லியம்சன் ஆட்டமிழந்தனர்.
4.2ஓவர்களில் 36ரன் எடுத்த ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.
சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினர்.
15ஓவர்களில் 6விக்கெட் இழந்து 88ரன் எடுத்திருந்தது ஐதராபாத்.20ஓவர் முடிவில் ஐதராபாத்தின் ரன்களை 139க்குள் முடக்கியது சென்னைசூப்பர் கிங்ஸ்.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியை பழிவாங்கும்விதமாக ஷான்வாட்சன் டக் அவுட் செய்யப்பட்டார்.
டியூப்ளசுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார்.
5ஓவர்கள் 3விக்கெட்டுகளை இழந்து 25ரன் எடுத்த நிலையில், தோனியும், டியூப்ளசும் விளையாடி வந்தனர்.
10வது ஓவர் முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 50ரன் எடுத்தது சென்னை அணி.ப்ரேவோ, ஜடேஜா என விக்கெட்டுகள் வீழ டியூப்ளசுடன் சாஹர் ஜோடிசேர்ந்தார். 15வது ஓவர் முதல் ஆட்டம் களைகட்ட துவங்கியது.
19.1ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 140ரன் எடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் 2விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டியூப்ளசிஸ் 67ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here