கால்வாயில் சிக்கிய குழந்தைகள்! தந்தை கண் எதிரே பரிதாப பலி!!

கிருஷ்ணகிரி: கால்வாயில் சிக்கி தந்தை கண்ணெதிரே இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.
இத்துயரச்சம்பவம் நடந்துள்ளது கிருஷ்ணகிரியில்.
கிருஷ்ணகிரி சின்னபேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன்.
விவசாயம் செய்துவரும் இவர் ஆடுகள் வளர்த்துவருகிறார்.இவருக்கு தமிழ்ச்செல்வன், நந்தினி என்று இரு குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிவந்தார் நரசிம்மன்.
அவருடன் குழந்தைகளும் வந்தனர். ஒரு ஆடு வழிதவறி சென்றது.
அதனை பிடித்துவர குழந்தைகள் அதன்பின்னே ஓடினர்.

வழிதவறிய ஆடு கே.ஆர்.எஸ். அணை கால்வாயில் சிக்கியது. அதன்பின்னே சென்ற குழந்தைகள் கால்தவறி கால்வாய் சேற்றில் மூழ்கி இறந்தனர்.
குழந்தைகளை எச்சரித்தவாறே பின்தொடர்ந்து ஓடிவந்த நரசிம்மன் கண்ணெதிரே இத்துயர சம்பவம் நடந்துள்ளது.தீயணைப்புத்துறையினர் குழந்தைகள் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here