Connect with us

Crime

ஆந்திரா ரயிலில் திடீர் தீ! 3பெட்டிகள் சேதம்!!

Published

on

குவாலியர்: டெல்லியில் இருந்து ஆந்திரா சென்றுகொண்டிருந்த ஏசி ரயிலில் திடீரென்று தீப்பிடித்தது. அதில் 3பெட்டிகள் சேதமடைந்தன.

ரயில் எண் 22416 டெல்லி-விசாகப்பட்டிணம் இடையே இயக்கப்படும் ஏசி ரயில் டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்தது.

குவாலியர் ரயில் நிலையம் அருகே 2 கி.மீ. தூரம் உள்ளபோது ரயிலில் திடீர் என்று தீ பிடித்தது. ரயில்பாதை குறுக்கே சென்றுகொண்டிருந்த உயரழுத்த மின்கம்பி அறுந்து ரயில் பெட்டியில் விழுந்தது. அதனால் ஏசி மெஷினில் உராய்ந்து தீ பிடித்துள்ளது.
பி5, பி6, பி7 பெட்டிகளில் தீ பரவியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைத்து மீட்புப்பணிகள் நடந்துவருகின்றன.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator