கர்நாடகா தேர்தல் முடிவு!  பங்குச்சந்தையில்  எதிரொலி!

மும்பை:கர்நாடக தேர்தல் முடிவுகளை தொடர்ந்து 5வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232புள்ளிகள் குறைந்து 34, 616ஆக சரிந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 80புள்ளிகள் சரிந்தது. நிப்டி 10, 517புள்ளிகளில் முடிவடைந்தது.பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.
இருப்பினும், ரியல் எஸ்டே, மருந்து நிறுவனங்கள் மெட்டல் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தே காணப்பட்டன.
இதேபோன்று கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய், அமெரிக்க கச்சா எண்ணெய் விலைகள் கூடுதலாகி உள்ளன.


அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப்போட்டி தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் கூடுதல் வரிகள், கட்டணங்கள் ஆகியவற்றை இருநாடுகளும் பரஸ்பரம் தவிர்க்க உள்ளன.
இம்முடிவு வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் உற்சாகத்தை ஏற்படுத்தி புள்ளிகள் அதிகரிக்க உதவியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here