சவுதியில் ஆட்சி மாற்றம்! இளவரசர் காலித் வலியுறுத்தல்!!

ஜெர்மன்: சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் காலித் பின் பர்ஹான் அரசியல் அகதியாக ஜெர்மனியில் வசித்து வருகிறார்.சவுதி அரேபியாவின் தற்போதைய நிலைகுறித்து பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அரசர் சல்மான் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். சல்மான் அரசர் ஆனதில் இருந்து சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சவுதியில் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
சவுதியை சேர்ந்த பழங்குடிமக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வகாபிசத்தில் வளர்ந்தவர்கள் ஒருபுறம், வெளிநாடுகளில் படித்து வந்தவர்கள் ஒருபுறம் என்று சமூகம் இரண்டாக தெரிகிறது. வகாபிசத்தை சேர்ந்தவர்களா அல்லது தீவிரவாத அமைப்புகளின் ஸ்லீப்பர் செல்களா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
நாட்டில் வசிக்கும் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் கொதித்துப்போயுள்ளனர். அதனால் ஆட்சியாளர்களுக்கு சிக்கல் என்று தெரியும். எனவே, அவர்களை ‘மேக்கப் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர். 

சவுதியின் வளங்கள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு தாரை வார்க்கப்படுகின்றன.  அரசர் சல்மான் பதவியேற்றதில் இருந்து மிகவும் கடுமையாக நடந்துகொண்டு வருகிறார். சுதாய்ரிகள் தவிர அரசகுடும்பத்தை சேர்ந்த அனைவரும் புறக்கணிக்கப்படுகின்றனர். அரசியல் கைதுகள் அதிகரித்துள்ளன.  எனவே, சவுதியில் ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டும். எனவே எனது சித்தப்பாக்கள் அகமதுபின் அப்துல் அஜீஸ், மக்ரின்பின் அப்துல் அஜிஸ் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கிறேன். நீங்கள் முயற்சித்தால் அரசகுடும்பத்தில் அனைவரின் ஆதரவை பெற முடியும்.
இவ்வாறு காலித் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரசராக சல்மான் பொறுப்பேற்றதும் பட்டத்து இளவரசராக அகமதுபின் அப்துல் அஜிசைத்தான் நியமித்தார்.
பின்னர் 2015ல் முகமது பின் நயீபையும், 2017ல் முகமது பின் சல்மானையும் பதவியில் அமர்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here