37கார்களை அடித்து நொறுக்கிய நடிகர்!

அபுதாபி: பிரபாஸ் நடிக்கும் சாஹோ திரைப்படத்துக்கான சண்டைக்காட்சிகள் அபுதாபியில் எடுக்கப்பட்டன. ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கென்னிபேட்ஸ் இப்படத்தின் சண்டைகாட்சிகளை இயக்குகிறார். இதற்காக 21நாட்கள் பாலைவனத்தில் ஷூட்டிங் நடந்தது.பிரபாசுடன், கதாநாயகி ஸ்ரத்தாகபூரும் சேர்ந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
அபுதாபி இப்போது தாய்வீடு போல் பழக்கமாகிவிட்டது என்று பூரித்துள்ளார் பிரபாஸ்.
இப்படத்துக்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளேன்.இந்தியில் வசனம் பேசுவது சற்று சிரமமாக இருந்தது. உதவியாளர் வைத்துக்கொண்டு சமாளித்தேன்.இப்போது வரும் எல்லா படங்களிலும் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. 80கிராபிக்ஸ், 20சதவீதம் படப்பிடிப்பு என்று காட்சிகள் உருவாக்கப்படுகின்றன.

சாஹோ படத்தில் 95சதவீத காட்சிகள் உள்ளபடியே பிரமாண்டமாக படமெடுக்கப்பட்டுள்ளன. கென்னிபேட்ஸ் மிகவும் சிரமப்பட்டு சண்டைக்காட்சிகளை நுணுக்கமாக எடுத்துள்ளார். சண்டைக்காட்சியில் 37கார்கள், 7லாரிகள் சேதமடைந்தன. இவ்வாறு பிரபாஸ் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here