வழி தவறிய யானை குட்டி! நடு ரோட்டில் ஆட்டம்!!

மூணாறு: மூணாறு கேரளாவில் உள்ள சுற்றுலா தலம். வனப்பகுதியில் அமைந்துள்ள இங்கு யானை கூட்டம் சாலைகளில் அடிக்கடி கடப்பதை பார்க்கலாம்.யானை கூட்டத்தில் இருந்து சுமார் 5மாதம் மதிக்கத்தகக் யானை குட்டி ஒன்று வழி தவறி சின்னகானல் எனும் பகுதியில் ரோட்டிற்கு வந்துள்ளது.வாகனங்களை பார்த்து மிரண்ட குட்டி யானை அங்கும் இங்கும் ஓடியுள்ளது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறத்திவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். தாய் யானைக்காக இரண்டு நாட்கள் காத்திருந்து விட்டு வரவில்லை எனில் காட்டிற்குள் சென்று தாயோடு சேர்க்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here