கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 16பேர் பலி!

கோழிக்கோடு: நிபா வைரஸ் தாக்குதலில் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டத்தில் ஒரு செவிலியர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குப்பட்ட பலர் மருத்துவமனைியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளின் ரத்த மாதிரி புனேயில்
உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படுகின்றன. பலரின் ரத்த மாதிரிகள் புனே அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் இன்னமும் வெளியாகாமல் உள்ளன.வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய குழு ஆய்வுக்கு பின் நிபா வைரஸ் குறித்த நிலவரம் வெளியாகும்.நிபா வைரஸ் என்பது மலேசிய வனப்பகுதிகளில் இருக்கும் வௌவால்களிடம் இருந்து பரவுகிறது. இந்த வகையான வைரஸ் பல நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here