காங்கிரசுக்கு எத்தனை அமைச்சர்கள்?

பெங்களூர்:காங்கிரசுக்கு எத்தனை அமைச்சர்கள் பதவி என்பது செவ்வாய்க்கிழமை முடிவாகிறது.
கர்நாடகாவில் 78இடங்களை வென்ற காங்கிரஸ் மஜத ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.மஜத முதல்வர் குமாரசாமி புதன்கிழமையன்று பதவியேற்கவுள்ளார்.
டெல்லியில் இன்று சோனியாகாந்தி, ராகுல்காந்தியை அவர் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு வர அழைப்புவிடுத்தார்.ஆட்சியில் பொறுப்புகளை பகிர்வது குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது.
கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேசவுள்ளார்.
தலித், லிங்காயத்து என்று 2சமூகத்தினருக்கும் தலா ஒரு துணை முதல்வர் பதவி 20அமைச்சர்கள் பதவி தங்களுக்கு தேவை என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மஜத தரப்பில் 3துறைகள் தங்களுக்கு தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை இரவுக்குள் இதுகுறித்து முடிவெடுக்கப்படும். புதன்கிழமை பதவியேற்பு விழா முடிந்ததும் மறுநாளே தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடரவுள்ளார் குமாரசாமி.   பதவியேற்புவிழாவுக்கு சோனியாவும், ராகுலும் வருவதாக உறுதியளித்துள்ளனர்.  மாயாவதி, சீத்தாராம்யெச்சூரி ஆகிய தலைவர்களையும் அழைத்துள்ளார் குமாரசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here