தினமும் 5ஜிபி டேட்டா! ஜியோ அதிரடி திட்டம்!!

மும்பை: ஜியோ நிறுவனம் தினமும் 5ஜிபி டேட்டா வழங்கும் புதிய ரிசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ.509, ரூ.799 ஆகிய இரு ரிசார்ஜ் திட்டங்களை கொண்டுவந்துள்ளது.இவ்விரு திட்டங்களும் 28நாட்கள் வேலிடிட்டி உடையன. ரூ.509 திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா கிடைக்கும். 4ஜிபி செலவழிந்ததும் இணையவேகம் 128கேபிபிஎஸ்-லிருந்து 64கேபிபிஎஸ்-ஆக குறையும்.அனைத்து அழைப்புகள் இலவசம், ஒரு ஆண்டு ஜியோ ஆப் இலவச சந்தா, 100இலவச எஸ்.எம்.எஸ்.கள் இத்திட்டத்தில் கிடைக்கும். ரூ.799 திட்டத்தில் தினமும் 5ஜிபி டேட்டா கிடைக்கும். 5ஜிபி ஒரு தினத்தில் செலவழிந்தால் டேட்டாவேகம் 64கேபிபிஎஸ்-ஆகிவிடும்.தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஓராண்டுக்கு ஜியோ ஆப் சந்தா இலவசம். உள்ளூர், வெளியூர் அழைப்புகள் இலவசம் ஆகிய சலுகைகள் இத்திட்டத்தில் உண்டு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here