கோவா, மணிப்பூரில் காங்கிரசால் முடியாது!

டெல்லி:கர்நாடகாவில் தேர்தல் முடிவுகளுக்குப்பின் முதன்முறையாக நிருபர்களை சந்தித்தார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.
அவரளித்த பேட்டி விபரம்:கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அரசின் தோல்விகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தோம்.
கடந்த 5ஆண்டுகளில் 3700விவசாயிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான வார்ச்சித்திட்டத்தை முன்னெடுப்போம் என்ற கோஷத்தையே எடியூரப்பாவைக்கொண்டு தெரிவித்தோம்.
தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாகவே இருந்தன. அதாவது காங்கிரசுக்கு எதிரானதாக இருந்தன. 122 இடங்களில் இருந்து 78இடங்களாக அதன் வெற்றி சரிந்தது.முதல்வர் சித்தராமையா ஒரு தொகுதியில் தோற்றார். அமைச்சரவையில் இருந்த பாதிக்கும் மேலானவர்கள் தோற்றனர். பாஜக அமைப்புரீதியாக பலம் குன்றிய இடங்களில் மஜதவால் வெல்ல முடிந்தது.
கர்நாடகாவின் புதிய ஆட்சியை மக்கள் கொண்டாடவில்லை. காங்கிரசு, மஜதவும் மட்டுமே கொண்டாடுகின்றன. மஜதவும் போட்டியிட்ட பெரும்பான்மையான இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.நாங்கள் மணிப்பூர், கோவாவில் ஆட்சியமைக்க கோரியதைப்போன்றே இங்கும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்.
இதில் தவறு ஒன்றும் இல்லை. 13இடங்களில் மிகக்குறைந்த இடங்களில் சொல்லப்போனால் நோடா-வுக்கு கிடைத்த வாக்குகளைவிடவும் குறைந்த வாக்குகளில் தோற்றுள்ளோம்.காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொருந்தாத கூட்டணி அமைத்துள்ளது. பணபலத்தை பயன்படுத்தியுள்ளது.
அக்கட்சி, மணிப்பூர், கோவாவில் ஆட்சியமைக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here