காரைஏற்றி பெண் கொலை! கள்ளக்காதலன் சரண்!

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் பெயிண்டர் மணிகண்டன். இவரது மனைவி சுமதி.
மணிகண்டனின் உறவினர் வசந்தகுமார் டிரைவராக வேலை செய்து வரும் வசந்தகுமாருக்கு திருமணம் ஆகவில்லை. உறவினர் என்பதால் சுமதியிடம் வசந்தகுமார் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இதுதொடர்பாக மணிகண்டனுக்கம் சுமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சில மாதங்களாக வசந்தகுமாரிடம் பேசுவதை சுமதி நிறுத்திவிட்டார். இதில் கோபமடைந்த வசந்தகுமார் சம்பவத்தன்று மணிகண்டன் அவரது மனைவி சுமதியுடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது வசந்தகுமார் காரில் குடியாத்தம் நோக்கி வந்துள்ளார். பைக்கில் சுமதி கணவருடன் செல்வதை பார்த்து ஆத்திரம் அடைந்த செல்வகுமார் காரை மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் மருத்துவமனையில் சேர்த்தனர். வசந்தகுமார் போலீசில் சரண் அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here