பெண்கள் இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்!

சென்னை: தனது கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் ரஜினிகாந்த்.
ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் முன்னேறி இருக்கின்றன. பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். நான் துவங்க போகும் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
கட்சியே தொடங்காத நான், கமல்ஹாசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்.
கட்சி துவங்கிய பிறகே கூட்டணி பற்றி பேச முடியும். இவ்வாறு ரஜினிபேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here