மனைவியை கொல்ல முயன்ற போலிடாக்டர் கைது!

டெல்லி: போலி டாக்டராக நடித்து மனைவியை கொல்லமுயன்றவர் கைதானார்.
டெல்லி மோதி நகரில் பல் மருத்துவமனை நடத்திவருகிறார் ஒரு பெண் டாக்டர்.
பொருத்தமான கணவர் வேண்டி இணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.


அதனை பார்த்து வெளிநாட்டில் டாக்டர் பட்டம் பெற்ற மணிஷ்கவுல் என்பவர் பெண்டாக்டரை அணுகினார்.
இருவரும் ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.கடந்த ஒருவருடத்தில் மனைவியிடம் ரூ.70லட்சம் கறந்துள்ளார் மணிஷ்கவுல்.
இத்தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையே மணிஷ்கவுல் போலிடாக்டர் என்று தெரியவந்தது.
அவர் மீது கோவா, நொய்டா, புனே நகரங்களில் வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது.
உஷாரான பல்டாக்டர் கணவன் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.அதனை வாபஸ் பெற மனைவியை தொடர்ந்து வலியுறுத்திவந்தார் மணிஷ்கவுல்.
சனிக்கிழமை துப்பாக்கியுடன் மனைவியின் க்ளினிக்வந்த அவர் கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார் பல்டாக்டர். போலீசார் மோதிநகர் முழுவதும் குவிக்கப்பட்டனர்.
அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார் மணிஷ் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here