பாஜகவுடன் கூட்டணிக்கு மறுப்பு! குமாரசாமிக்கு பாவ விமோசனம் கிடைத்தது!!

பெங்களூர்:பாஜகவுடன் கூட்டணி ஆட்சிஅமைத்த பாவத்தில் இருந்து விமோசனம் பெற்றுள்ளார் குமாரசாமி என்று தெரிவித்துள்ளார் தேவகவுடா.கர்நாடகாவில் 21ம் தேதி மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொடங்கவுள்ளது.
மஜத தேசிய தலைவர் தேவகவுடா அளித்த பேட்டி:
தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்று எதிர்பார்த்தேன். ஆட்சிவாய்ப்பு பரிசாக கிடைத்துள்ளது. கூடுதல் இடங்களில் வென்றிருந்தால் இந்த பரிசு மிகவும் நன்றாக இருந்திருக்கும்.மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்த கூட்டணி அமைக்கின்றன. காங்கிரசும் உடனடியாக செயல்பட்டு நிபந்தனையற்ற ஆதரவு என்று தெரிவித்தது.
2008ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தபோதே எச்சரித்தேன். குமாரசாமி தவறு செய்துவிட்டார். அப்போதுசெய்த பாவத்தில் இருந்து இப்போது விமோசனம் பெற்றுவிட்டார். இப்போது பாஜக கூட்டணியை தவிர்த்துவிட்டார்.2004-2006காலகட்டத்தில் ஏற்பட்ட காங்கிரஸ்-மஜத கூட்டணி நிலைக்கவில்லை. தோல்வியின் காரணத்தை இருவருமே தெரிந்துகொண்டுள்ளோம். இனி அவ்வாறு நடக்காது. குமாரசாமி அனைவரையும் அரவணைத்து செல்வார். ஆட்சி ஐந்தாண்டு நீடிக்கும்.
இக்கூட்டணி அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும்.இம்முறை ஆட்சியமைக்க பாஜக கோரியது தவறு. பிற மாநிலங்களில் ஒருவகையாகவும் இங்கு ஒருமாதிரியாகவும் விண்ணப்பித்தனர்.கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்தால் அக்கட்சிக்குத்தான் வாய்ப்புத்தரவேண்டும். இவ்வறு முன்னர் நடந்துள்ளது.
என்னை சாணக்கியன் என்றெல்லாம் கூறுகின்றனர். எப்போதும்போல் நான் ஹெச்.டி.தேவகவுடா தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here