குமாரசாமி பதவியேற்பு ஒத்திவைப்பு!

பெங்களூர்: ராஜிவ் காந்தி நினைவுதினம் அனுசரிப்பதை முன்னிட்டு தனது பதவியேற்பு தினத்தை 2நாள் ஒத்திவைத்துள்ளார் குமாரசாமி.3நாள் முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆட்சியமைக்க வருமாறு மஜத தலைவருக்கு ஆளுநர் வாஜூபாய் ஓலா அழைப்பு விடுத்தார். 21ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்க திட்டமிட்டிருந்தார் குமாரசாமி.ஆனால், அன்று ராஜிவ்காந்தியின் 27வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, காங்கிரஸ்கோரிக்கையை ஏற்று புதன்கிழமை பதவியேற்கிறார் குமாரசாமி.திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ஆன்மிக பயணத்தை முடித்துக்கொண்டு பெங்களூர் திரும்பும் அவர் நாளை டெல்லி செல்கிறார். அங்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்திக்கிறார்.  அமைச்சரவை நியமனங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.    காங்கிரஸ் தலைவர்களும் நாளை டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்திக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here