வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேன்! காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒப்புதல்!!

மைசூர்:பேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹன்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஞ்சுநாத் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். 3வது முறையாக சித்தராமையா ஆசியால் எம்.எல்.ஏ.வாகி உள்ளேன்.

பேரவைதேர்தலில் மிகவும் கடினமான சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தது.
வாக்காளர்களுக்கு பிரித்துக் கொடுங்கள் என்று நிர்வாகிகளிடம் சூட்கேஸ்கள் அளிக்கப்பட்டன. ஆனால் நிர்வாகிகள் வாக்காளர்களிடம் பணத்தை கொண்டுசேர்க்கவில்லை. கட்சியை ஏமாற்றிவிட்டனர்.பணத்தை சூதாட பயன்படுத்தினர். யார் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று நடைபெற்ற ‘பெட்டிங்’கில் பணத்தை வாரி இறைத்துள்ளனர்.
எதிர்க்கட்சி வெற்றிபெறும் என நினைத்து பந்தயத்தில் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். பணத்தை நிர்வாகிகளிடம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மஞ்சுநாத் எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here