பெண் குழந்தையை மிதித்துக்கொன்ற கொடூர தாய்!

சென்னை:சென்னையில் குழந்தையை காலால் மிதித்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை செனாய்நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பிரியங்கா(22). இவர் பெயிண்டர் வேலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட வேலு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிரியங்கா அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமாருடன் சேர்ந்து வாழந்து வந்தார்.
அவர்களுக்கு ஸ்ரீமதி (3), புஷ்பம் (1) என்ற பெண் குழந்தைகள் பிறந்தன.
வேலுவும், பிரியங்காவும் சேர்ந்து மது அருந்துவதாக தெரிகிறது. சம்பவத்தன்று போதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் இரண்டாவது குழந்தை புஷ்பாவை பிரியங்கா காலால் மிதித்துள்ளார்.

அதில் குழந்தையின் மூக்கு, வாயில் இருந்து ரத்தம் வந்தது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை ஏற்கனவே இறந்ததாக கூறிய மருத்துவர்கள் குழந்தை சாவில் சந்தேகம் அடைந்து போலீசில் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணையில் குழந்தை புஷ்பத்தை காலால் மிதித்து கொன்றதை பிரியங்கா ஒப்புக்கொண்டார். இதனால் கொலை வழக்கில் பிரியங்காவும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வேலுவும் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here