’ஆப்’ உதவியுடன் பாஜகவுக்கு ஆப்பு!

பெங்களூர்:கர்நாடகாவில் பாஜக ஆட்சியை மாற்ற காங்கிரஸ் சினிமாவை விடவும் பரபரப்பு சம்பவங்களை நடத்தியுள்ளது.
கர்நாடகா தேர்தல் 12ம் தேதி நடைபெற்று முடிவுகள் 15ல் அறிவிக்கப்பட்டன.
கருத்துக்கணிப்புகள் படி எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.104 எம்.எல்.ஏ.க்கள் பெற்ற பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புக்கோரி எடியூரப்பா முதல்வரானார்.
78காங்கிரஸ், 37மஜத, 2சுயேச்சைகள் இணைந்த கூட்டணிக்கு ஆளுநர் வாய்ப்பு மறுத்தார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது.
நீதிமன்றம் ஆளுநர் அளித்த 15நாள் அவகாசத்தை சனிக்கிழமையாக குறைத்தது.
சனிக்கிழமை தனது பெரும்பான்மையை நிரூபிக்குமுன்னரே எடியூரப்பா ராஜினாமா செய்தார்.முடிவுகள் இழுபறியாக அமையவே காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்தாக்கூர், விஷ்ணுநாத், மதுகவுடா, துருவநாராயணா, டி.கே.சுரேஷ் ஆகியோர் கர்நாடகாவின் பல பகுதிகளுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்தனர். அவர்கள் வேறெங்கும் போகவிடாமல் தடுத்து பெங்களூருக்கு அழைத்துவந்தனர்.

உஷாராக அவர்கள் செல்போன்களை வாங்கிவைத்துக்கொண்டனர்.
ஈகிள்டன் ரிசார்ட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பத்து எம்.எல்.ஏ.க்களுக்கு ஒருவர் என்று நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
குடும்பத்தினரிடம் செல்போனில் பேசவேண்டும் என்று பலர் வலியுறுத்தினர்.
எம்.எல்.ஏ.க்கள் செல்போன்களில் ’கால் ரிகார்டர் ஆப்’ டவுன்லோடுசெய்யப்பட்டு மீண்டும் தரப்பட்டது.வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவர்கள் கொச்சிக்கு செல்வதாக சொகுசுபஸ்களில் அழைத்துச்செல்லப்பட்டனர். எம்.எல்.ஏ.க்களில் சிலர் தூங்க ஆரம்பித்ததும் பஸ்கள் ரூட்மாறி ஹைதராபாத் சென்றன.
ஹைதராபாத், தெலங்கானா பகுதிகளில் இரு மாநில போலீசாரும் காங்கிரசாரின் வாகனங்களுக்கு பாதுகாப்பு தந்தனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் முகாமில் இருந்த சுயேச்சை உறுப்பினர் தப்பமுயன்றார். அவரை சித்தராமையா போனில் சமாதானம் செய்து முகாமுக்கு திருப்பிவரவழைத்தார்.

கொச்சிசெல்வதாக அழைத்துச்செல்லப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவரிடம் பாஜக முகாமில் இருந்து பேரம்பேசப்பட்டு அதனை சிடியாக வெளியிட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.
சனிக்கிழமை பெங்களூர் திரும்பிய எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங் முகாமுக்கு திரும்பிவிட்டார் என்ற மகிழ்ச்சியான செய்தி கூறப்பட்டது.

ஆனந்த்சிங்கும், பிரதாப்கவுடாவும் கடைசிநேரத்தில் சட்டசபைக்கு வந்தனர்.
ஒரு ’ஆப்’ உதவியால் எம்.எல்.ஏ.க்களை கண்காணித்து பாஜகவுக்கு ஆப்பு வைத்தது காங்கிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here