விவசாயிகள் நலனுக்காக உயிரையும் தருவேன்! ராஜினாமா செய்யுமுன் எடியூரப்பா உருக்கம்!!

பெங்களுர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா இன்று தயாரானார். அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்ற பின்னர் அவர் அவையில் உருக்கமாக அவர் பேசியதாவது:முந்தைய அரசுமீதான நம்பிக்கையின்றி மக்கள் நமக்கு 4தொகுதிகளில் 3ல் பாஜகவை ஜெயிக்கவைத்தனர். மோடிஅரசு மீதான நம்பிக்கையும், நமது முந்தைய அரசு மீதான அவநம்பிக்கையினால்தான் பாஜகவை அதிகளவில் ஆதரித்தனர்.மக்களின் விருப்பம் காங்கிரஸ், மஜதவுக்கு புரியவில்லை. அவர் முதல்வராக கூடாது. இவர் முதல்வராக கூடாது என்று பேசிவந்தனர். அவர்கள் மக்கள் விருப்பத்துக்கு விரோதமாக செயல்படுகின்றனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றதால் நான் ஆளுநரிடம் சென்று முதல்வராக பதவியேற்றேன்.37,500விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நொந்து வெந்துள்ள விவசாயிகளுக்கு தண்ணீர், விளைபொருளுக்கு விலை கிடைக்க யோசித்து திட்டங்களை நிறைவேற்றத்தான் முதல்வராக பதவியேற்றேன். அன்னதாதாவாக உள்ள விவசாயிகளுக்கு நிம்மதி, கவுரம், மரியாதைக்காக எல்லோரும் சேர்ந்து பாடுபடவேண்டும். யார் எவ்வளவு ஜெயித்தோம் என்பதை நான் நினைக்கவில்லை.கடந்த 5ஆண்டுகளாக நான் ஆட்சியை கவனித்துவருகிறேன். மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. மக்களை சந்தித்து அவர்களுக்காக போராடி, மாநாடு, யாத்திரை நடத்தி  இந்த மன்றத்துக்குள் வந்துள்ளேன். விவசாயியை முன்னேற்றவும் ,மக்களுக்கும் சேவையாற்ற உயிரையும் கொடுப்பேன். ஒருலட்சம் வரையிலான கடன், ஒன்றரை லட்சம் கோடி நீர்வளதிட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு. விளைபொருட்களுக்கு உரியவிலை. கீழ்த்தட்டு மக்களுக்கான நலன்கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.ஏழைகள், தலித்மக்கள் வீட்டில் அவர்களுடன் வாழ்ந்துள்ளேன். ஐந்தடி வீட்டில் அவர்கள் வசித்துவருவதை கவலையுடன் பார்த்தேன். அவர்கள் நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவேன். நதிகள் இணைப்புக்கு மோடியும் ஆலோசனை தெரிவித்துள்ளார். சாலை, ரயில், மெட்ரோரயில், திட்டங்களுக்கு கூடுதலாக பணம் கிடைத்து பல்வேறு நலத்திட்டங்களை கிடைக்கச்செய்வேன். நம்மாநிலத்தில் அனைத்து வளங்களும் உள்ளன.அவர்கள் மேம்பாட்டுக்குத்தான் அரசமைக்க தேர்தல் நடந்து தற்போது முடிவுகள் வந்துள்ளன. என்வாழ்வில் எப்போதும் அக்னிப்பரீட்சைதான் சந்தித்து வந்துள்ளேன். நான் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மாநில வளர்ச்சிக்காக உயிரைக்கொடுத்து பாடுபடுவேன். எம்பி தேர்தலில் 28தொகுதியில் பாஜகவை வெற்றிபெறுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
குமாரசாமிக்கு ஒன்று கூறிக்கொள்கிறேன். மக்கள்நலனுக்காக எந்தக்களத்திலும் இறங்கி போராடுவேன். எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் என்னிடம் பேசி எனக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். அது உண்மைதான். இருப்பினும், மக்களின் ஆசிக்கு, தீர்ப்புக்கு வணக்கம் செலுத்துகிறேன். எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆளுநரிடம் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா அவையில் பேசினார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here