இளைஞர்களுக்கான புதிய அமைப்பு!! கிரிக்கெட் வீரர் சச்சின் துவக்குகிறார்!

புனே:கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இளைஞர்களுக்கான புதிய அமைப்பை தொடங்கிவைக்கிறார்.புனே பல்கலைக்கழகம் இளைஞர்களிடம் விளையாட்டு, ஆரோக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்த இளமைத்திட்டம் என்ற அமைப்பை தொடங்கவுள்ளது.
இதற்கான விழா பல்கலைக்கழகத்தில் மே 21ம் தேதி நடைபெறுகிறது. இந்த அமைப்பின் கவுரவ தலைவராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் பலர் விளையாட்டுவீரர்களாக சிறந்து விளங்குகின்றனர். ஆனால், பெரும்பான்மையானோர் விளையாட்டு மைதானங்களை எட்டிப்பார்ப்பதே இல்லை. அனைத்து மாணவர்களும் அவர்களுக்குப்பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டை தேர்வு செய்து தங்கள் உடலும் மனமும் உற்சாகமாக வைத்திருக்க வேண்டும்.     இதற்காகவே இந்த திட்டத்தை துவக்கியுள்ளோம்.

பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூரிகளாக விளங்கும் 250 அமைப்புகளுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி அதன் நிர்வாகிகளை பங்கேற்கவைக்கிறோம் என்று புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here