பாஜகவின் தாளத்துக்கேற்ற ஆட்டம்! கர்நாடகா அரசியலில் நடக்கவில்லை!!

பெங்களூர்: எடியூரப்பா ராஜினாமா செய்தபின்னர் முன்னாள் முதல்வர் சித்தராமையா அளித்தபேட்டி: பாஜகவினர் தங்களது தாளத்துக்கேற்ற ஆட்டம் நடக்கும் என நினைத்தனர். நீதிமன்றம் அதற்கு விடவில்லை. இதுவரலாற்றுசிறப்புமிக்க ஒரு தருணம்.எந்தஒரு ஆசைக்கும் விலைபோகாமல் கட்சியின் மானத்தை காப்பாற்றிய மஜத, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி. அவர்கள் மக்கள் தங்களுக்கு அளித்த பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டுள்ளனர்.தேர்தலுக்கு முன்னர் சிபிஐ, ஐடித்துறையினர் மூலமாக எதிர்க்கட்சியினருக்கு தொடர்ந்து துன்புறுத்தல் தரப்பட்டது. நான் 40ஆண்டு அரசியலில் உள்ளேன். பல தேர்தல்களை சந்தித்துள்ளேன். வரலாற்றில் முதல்முறையாக நடந்த அதிகார துஷ்பிரயோகம் இது. கோவா, மணிப்பூர், மேகாலயா, பிகார் மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தது போன்று பாஜக இங்கும் முயன்றது. ஆனால் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையால் அது முறியடிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here