ரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. கர்நாடகா மக்களிடம் தமிழர்களுக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து அன்பை காட்டுங்கள் எனக் கூறினார். ஐபிஎல் விளையாட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.அவரை ரிலிஸ் செய்ய வேண்டும் என போலிசிடம் கேட்டுக்கொண்டது. சமூக வலைதளங்களில் பொது கருத்துக்கைளை வெளியிடுவது. மக்கள் மீதான அக்கறை போன்றவற்றால் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரான மதன் என்பவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். தன்னுடைய ரசிகருக்காக சிம்புவே சாலையோர சுவர்களில் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்.
இதனால் மதனின் ஆத்மா சாந்தியடையும் என சிம்புவின் ரசிகர்கள் கூறுகின்றனர். சிம்பு போஸ்டர் ஒட்டும் வீடியோ காட்சி மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here