பெட்ரோல் பங்கில் சில்லறை தகராறு! வாலிபரை எரித்துக்கொல்ல முயற்சி!!

கொச்சி:பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட சில்லறைத்தகராறில் வாலிபரை எரித்துக்கொல்ல முயற்சி நடந்தது.
திருச்சூர் மூண்றுமுரியில் பெட்ரோல்பங்க் இயங்கிவருகிறது.அங்கு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப வினீத் என்பவர் வந்தார்.
பெட்ரோல் நிரப்புபவர் தன்னிடம் ரூ.2ஆயிரத்துக்கு சில்லறை இல்லை என்றார்.
அப்போது அருகில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தவர் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார்.

அவரிடம் சில்லறை கேட்டார் வினீத். இதனால் இருவருக்கும் தகராறு எழுந்தது.
உடனே அங்கிருந்த் பாட்டில் ஒன்றில் பெட்ரோலை நிரப்பி எடுத்துவந்து சில்லறை தராத நபர்மீது வீசி தீவைத்தார் வினீத்.
தீக்காயங்களுடன் அந்த வாலிபர் அருகில் இருந்த ஓடையில் குதித்து உயிர்தப்பினார். அவர் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.
தீயை அணைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தப்பமுயன்ற வினீத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here