திருச்சி: திருச்சியில் நடைபெறும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இருவரும் ஒரே விமானத்தில் திருச்சி வந்தனர்.இவர்களை வரவேற்க அக்கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அப்போது தொண்டர்களுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இருகட்சி தொண்டர்களும் கொடி கம்புகளால் தாக்கி கொண்டனர். இதில் தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. பாதுபாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு கட்சியினரையும் சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவத்தினால் விமான நிலைய பகுதி பரபரப்பானது. சில வாரங்களுக்கு முன் சீமான் தன்னை தெலுங்கர் என விமர்சிப்பதாக வைகோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.