கதுவா சிறுமி வன்கொடுமை வழக்கு! பேஸ்புக், டுவிட்டர், சமூக ஊடகங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!!

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவ தடயங்களை அழித்து திசை திருப்ப முயன்ற மூன்று போலீசார், சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், குடும்ப விவரங்களை வெளியிட
கூடாது என சமூக ஊடகங்கள், பத்திரிக்கை நிறுவனங்களை டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சமூக ஊடகங்கள் சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்டது அவள் குடும்பம் மற்றும்
நாட்டிற்கு செய்யும் அநியாயமாகும். இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here