கொல்கத்தா அணியின் த்ரில் வெற்றி!

ஐதராபாத்: ஐபிஎல் 2வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமியும் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.கோஸ்வாமி 35 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஷிகர் தவான் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியில் கிரிஸ்லின், சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
நான்காவது ஓவரில் ஒருவிக்கெட் இழந்து 53ரன் எடுத்திருந்தது கொல்கத்தா.
13வது ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 119ரன்குவித்தது.அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகள் சரிய 17ஓவர் முடிவில் 3விக்கெட்டுகளை இழந்து 155ரன் குவித்தது.
கடைசி ஓவரில் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. 5பந்துகளில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நிதிஷ்ரானா 7ரன்களில் களம் திரும்பினார். 5விக்கெட்டுகள் இழப்புக்கு 172ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.
4பந்துகளில் ஒரு ரன் என ஆட்டம் தொடர்ந்தது. இறுதிப்பந்தில் சுனில்கார்த்திக் ஒரு ரன் எடுத்தார்.
5விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here