கர்நாடக சபாநாயகராக போபையாவே செயல்படுவார்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக வாஜூபாய் வால் நியமித்த போபையாவை ரத்து செய்ய கோரிய வழக்கு உச்சநீதி மன்றம் விசாரித்தது.அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் ‘‘தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையாவை விட பலமுறை எம்எல்ஏவாக இருந்த அனுபவம் உள்ள பலர் உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ தேஷ் பாண்டே 8 முறை எம்எல்ஏவாக உள்ளார். போபையைவை நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.நீதிபதிகள் சபாநாகருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் பெற வேண்டும் அதன் பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் அதுவரை கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த முடியாது. வாக்கெடுப்பை ஒத்தி வைக்க காங்கிரஸூக்கு சம்மதமா? என கேட்டார்.சபாநாயகர் நியமன விவகாரம் தொடர்பான மனுவை விசாரிக்க போதிய கால அவகாசம் இல்லை என்பதால் அவரது நியமனத்தை ரத்து செய்ய முடியாது. அவரே தற்காலிக சபாநாயகராக தொடருவார். அவரே வாக்கெடுப்பையும் நடத்தி முடிப்பார் என உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here