கூட்டணி முதல்வர் குமாரசாமி! திங்கட்கிழமை பதவியேற்பு!!

பெங்களூர்: கர்நாடாகவின் புதிய முதல்வராக குமாரசாமி திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.
கர்நாடக பேரவை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
இதனால் 104இடங்களை வென்ற பாஜக ஆட்சியமைக்க உரிமைகோரியது.ஆளுநர் வாஜ்பாய்வாலா எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்க 15நாள் அவகாசம் கொடுத்தார்.
ஆனால், உச்சநீதிமன்றம் பெரும்பான்மையை சனிக்கிழமை நிரூபிக்க வேண்டும் என்று கூறியது.
மஜத, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து யாரும் பாஜகவுக்கு தாவவில்லை.
குதிரைபேரங்கள் தோல்வியில் முடிந்ததால் உச்சநீதிமன்றம் அளித்த அவகாசப்படி மாலை 4மணிவரை முதல்வராக இருந்துவிட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா.அதனைத்தொடர்ந்து ஆட்சியமைக்க குமாரசாமியை ஆளுநர் அளித்தார்.
ஆளுநரை சந்தித்தபின் குமாரசாமி அளித்தபேட்டியில் திங்கட்கிழமை மதியம் 12முதல் 1மணிவரை பதவியேற்பதாக தெரிவித்துள்ளார்.பெங்களூர் விதானசவுதா வளாகத்தில் பிரமாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
அனைத்து மாநிலங்களில் இருந்தும் மதச்சார்பற்ற அணித்தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here