காதலியின் கணவரை கத்தியால் குத்திய காதலன்!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா புஷாவல் பகுதியை சேர்ந்தவர் சமீர்மிர்ஸா. உணவகத்தில் வேலை பார்த்துவந்தார். அங்கு பணியாற்றி வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.இவருவரும் காதலித்து வந்த நிலையில் அப்பெண்ணிற்கு பெரோஸ்ஷேக் என்பவருடன் திருமணம் நடந்தது. மிர்ஸா காதலியை அவரின் கணவருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.சம்பவத்தன்று மிர்ஸா காதலியின் வீட்டிற்கு அருகே கத்தியுடன் காத்திருந்தார். வீட்டிற்கு வந்த காதலியின் கணவரை, காத்து கொண்டிருந்த மிர்ஸா கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.தப்பி சென்ற மிர்ஸாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here